அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் சரக்கு கப்பல் மோதி பாலம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் மேரிலண்ட் பாலமேஇவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
பால்டிமோர், மேரிலாந்தில் உள்ள ஒரு பெரிய பாலம் செவ்வாய் காலை (26) பகுதியளவில் இடிந்து விழுந்துள்ளது பால்டிமோர் துறைமுகத்தை கடக்கும் பாலத்தில் சரக்கு கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகின்றது.
இதன் போது பாலத்தில் பயணித்தவர்கள் ஆற்றில் விழுந்துள்ளதாகவும் கூறப்படுவதுடன் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படும் அதேவேளை பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜில் கிழக்கு நேரப்படி அதிகாலை 1:27 மணிக்கு கடலோர காவல்படைக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது.
இந்நிலையில் தகவலறிந்து விரைந்து சென்ற பால்டிமோர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈருபட்டுள்ளதாக கூறப்படும் அதேவேளை , பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கபப்ட்டுள்ளதாக கூறப்படுகின்றது.