உலகளவில் பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றாக, ’எக்ஸ்’ தளம் உள்ளது. இந்த தளத்தை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
எக்ஸ் வலைதளத்தை இந்தியாவில் மட்டும் 2.6 கோடி பேருக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த பெப்ரவரி 26 முதல் மார்ச் 25 வரையிலான 1 மாதத்தில் மட்டும் 2,13,000 இந்தியர்களின் கணக்குகளை நீக்கம் செய்துள்ளதாக எக்ஸ் தளத்தின் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத செய்திகள் பரப்புதல், குழந்தை பாலியல் காணொளிகளைப் பதிவு செய்தல் உள்ளிட்ட காரணங்கள் அடிப்படையில் அதிகளவிலான கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1,235 இந்தியர்களின் கணக்குகள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டில் நீக்கம் செய்யப்பட்டு, மத்திய அரசாங்கத்திடம் முறைப்பாடும் அளிக்கப்பட்டுள்ளது.