Home இந்தியா இந்திய நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் – ஆபத்தான நச்சுப் பொருள்

இந்திய நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் – ஆபத்தான நச்சுப் பொருள்

by Jey

இந்திய நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் ஆபத்தான நச்சுப் பொருள் சேர்க்கப்படுவதாக கூறி, சர்வதேச அளவில் தடை விதிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய அரசுகள் விற்பனைக்கு தடை விதித்து அதிரடி காட்டியுள்ளன.

மசாலா பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவை சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் ஹாங்காங், சிங்கப்பூர் அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை, இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்டிஹச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் 4 மசாலா பிராண்ட்களில் எத்திலீன் ஆக்சைடு என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவை எம்டிஹச் Curry Powder, Mixed Masala Powder, Sambhar Masala மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் Fish Curry Masala ஆகியவை ஆகும்.

இவை மனிதர்கள் உணவில் சேர்த்து கொண்டால் நீண்ட கால அடிப்படையில் ஆபத்து ஏற்படும். புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என கூறப்படுகிறது.

 

 

 

 

 

 

related posts