உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பை உலகளாவிய ரீதியில் கையாண்ட அமெரிக்கா, அவுஸ்திரேலியா பொலிஸார் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த போதும், சில கட்சிகள் தற்போது இதனை கையில் எடுத்து அரசியலாக்கப் பார்க்கிறார்கள் என இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(Sivanesathurai Chandrakanthan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (21.04.2024) மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் ஒரு பொறுப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும், ஜே.வி.பி போன்ற கட்சிகளும் தற்போது இதனை கையில் எடுத்து அரசியலாக்கப் பார்க்கிறார்கள்.
மதங்களைப் பின்பற்றுவது சம்பந்தமான ஒரு அறிவு ரீதியாக ஒழுங்குபடுத்தலை எதிர்காலத்தில் உண்டாக்குவதன் மூலம் மதத்தின் பெயரால் இவ்வாறான குண்டு வெடிப்புகளை தவிர்க்க முடியும்.
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் போது ஒரே நேரத்தில் பல இடங்களில் குண்டு வெடிப்பை தற்போது அரசியலாக்க பார்க்கிறார்கள்.
இவர்கள் ஆழமான அறிவை தேடி பார்க்க வேண்டும். இதனை அரசியல் சாயம் பூச முயல்கிறார்கள். எல்லா மதங்களிலும் கடும் போக்கானவர்கள் இருக்கிறார்கள்.