“பிறர் என்னைப் பற்றி பேசுவதையோ கொண்டாடுவதையோ நான் விரும்பவில்லை” என நடிகர் ஃபகத் ஃபாசில் நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
மலையாள சினிமா துறையில் கதாநாயகன் என்பதை தாண்டி பல்வேறு குணச்சித்திர வேடங்கள் ஏற்று தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை வென்றவர் ஃபகத் ஃபாசில்.
மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர் ஃபகத்.
சிறந்த கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஃபகத் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் கலக்கி வருகிறார்.
ஜித்து மாதவன் இயக்கத்தில் பாசிலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆவேஷம். இப்படத்தில் மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
சுஷின் ஷ்யாம் இசையமைக்கும் இப்படத்தை ஃபகத் ஃபாசில் அண்ட் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இத்திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதனுடன் ஃபகத் ஃபாசிலின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஃபகத் ஃபாசில், “பிறர் என்னைப் பற்றி பேசுவதையோ கொண்டாடுவதையோ நான் விரும்பவில்லை” எனக் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: