Home கனடா எயார் கனடா விமானமொன்றில் பழங்குடியினத் தலைவிக்கு ஏற்பட்ட அவமரியாதை

எயார் கனடா விமானமொன்றில் பழங்குடியினத் தலைவிக்கு ஏற்பட்ட அவமரியாதை

by Jey

எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் பயணம் செய்த பழங்குடியின தலைவி ஒருவரது தலையங்கியினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

விமானத்தில் வைத்து விமானப் பணியாளர்கள் குறித்த தலையங்கியை அகற்றியுள்ளனர்.

பழங்குடியின சமூகத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் இவ்வாறு தலையங்கி அணிவது வழமையானதாகும்.

சின்டி வுட்ஹவுஸ் நெபினாக் என்றவரின் தலையங்கியே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது.

பழங்குடியினத் தலைவியை அவமரியாதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் கனடாவில் பெரும் பேசுபொருளாக காணப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பழங்குடியின தலைவிக்கு ஏற்பட்ட அசௌகரியத்தை ஈடு செய்யும் வகையில் விமானப் பயணச்சீட்டு கட்டணத்தில் 15 வீத கழிவு வழங்க இணங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்காக எயார் கனடா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

 

 

related posts