Home கனடா முகம் தெரியாத ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய – கனடிய பொலிஸ்

முகம் தெரியாத ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய – கனடிய பொலிஸ்

by Jey

கனடிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முகம் தெரியாத ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார்.

மொன்றியலின் தென்பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு இனம் தெரியாத தெரியாத ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை வழங்கியுள்ளார்.

பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இவ்வாறு சுயநலமற்ற வகையில் தானம் வழங்கியுள்ளார்.

கியூபெக்கைச் சேர்ந்த ஜோனா லவ் என்ற பாடசாலை ஆசிரியர் கோவிட்19 பெருந்தொற்று காலப் பகுதி முதல் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆசிரியருக்கு, எனி டிவோஸ்ட் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் தனது சிறுநீரகத்தை வழங்கியுள்ளார்.

குழந்தை பாக்கியமற்ற எனி டிவோஸ்ட், தேவைப்படும் ஒருவருக்கு சிறுநீரகத்தை வழங்கத் தீர்மானித்துள்ளார்.

தனது சிறுநீரகம் கியூபெக் மாகாணத்தில் இருக்கும் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையுடன் டிவோஸ்ட் சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார்.

சிறுநீரகத்தை தானமாக வழங்கியவரும் பெற்றுக்கொண்டவரும் சந்தித்த தருணம் நெகிழ்ச்சி மிக்க உணர்வுபூர்வமான தருணமாக அமைந்திருந்தது.

தனது சிறுநீரகத்தை வழங்கியதன் மூலம் ஏனையவர்களையும் இவ்வாறான கொடைக்கு ஊக்கப்படுத்துவதாக பொலிஸ் உத்தியோகத்தர் டிவோஸ்ட் தெரிவித்துள்ளார்.

 

 

 

related posts