Home உலகம் தென்ஆபிரிக்காவில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக்கட்டிடம்

தென்ஆபிரிக்காவில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக்கட்டிடம்

by Jey

தென்ஆபிரிக்காவில் ஐந்து மாடிக்கட்டிடம் இடிந்துவிழுந்ததில் இருவர் பலியாகியுள்ள அதேவேளை சுமார் 55 பேர் கட்டிட இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் வெஸ்டேர்ன் கேப் மாகாணத்தின் ஜோர்ஜியாவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கட்டிட 22பேர் இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டிடம் இடிந்துவிழுந்தவேளை கட்டிடத்திற்குள் சுமார் 75 பேர் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மீட்கப்பட்ட 22 பேரில் இருவர் பின்னர் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன இடிபாடுகளை அகற்றுவதற்கான இயந்திரங்களை பயன்படுத்துவதுடன் , மோப்பநாய்களை பயன்படுத்துகின்றோம் எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அதேசமயம் . கட்டிடம் முழுமையாக தரைமட்டமான நிலையில் காணப்படுவதையும் கட்டிடத்தின் கூரைஇடிபாடுகளிற்குள் காணப்படுவதையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

related posts