Home உலகம் நிவாரணப் பொருட்களை அனுமதிக்க ஐநா கொடுத்த அழுத்தம் – காசா எல்லையில்  ஒரு பாதை திறப்பு

நிவாரணப் பொருட்களை அனுமதிக்க ஐநா கொடுத்த அழுத்தம் – காசா எல்லையில்  ஒரு பாதை திறப்பு

by Jey

இஸ்ரேல், காசா போரால் பாதிக்கப்பட்டு, காசா பகுதியில் சுமார் 23 லட்சம் பேர் நிவாரணப் பொருட்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எகிப்து மற்றும் காசா எல்லை என இரண்டு சாலைகள் உள்ள நிலையில், பாதுகாப்பு காரணமாக அவற்றை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.

நிவாரணப் பொருட்களை அனுமதிக்க ஐநா கொடுத்த அழுத்தம் காரணமாக ஒரு பாதை திறக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந் நிலையில், எந்த வாகனமும் பாலஸ்தீன பகுதிக்குள் செல்லவில்லை என்று ஐநா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் ஊடுருவலால், பாலஸ்தீன எல்லையில் நிவாரணப் பொருட்கள் வந்தாலும் வாங்கி மக்களுக்கு கொண்டு சேர்க்க யாரும் இல்லை என்றும் ஐநா கூறியுள்ளது.

இதன் காரணமாக , நிவாரணப் பொருட்களுடன் வாகனங்கள் காத்திருக்கும் சூழல் நீடிப்பதாக கூறப்படுகிறது.

related posts