Home கனடா தாய்ப்பாலூட்டிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை தாக்கிய நபர் – கொந்தளித்த பொதுமக்கள்

தாய்ப்பாலூட்டிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை தாக்கிய நபர் – கொந்தளித்த பொதுமக்கள்

by Jey

கனடாவில், காரில் அமர்ந்து தன் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை, ஒருவர் திடீரென தாக்கியதால், பொதுமக்கள் கொந்தளித்த சம்பவம் ஒன்று நேற்று முன் தினம் நடைபெற்றது.

நேற்று முன்தினம், அதாவது, வியாழக்கிழமை மதியம் 2.15 மணியளவில், வான்கூவரில், சாலையோரமாக காரை நிறுத்தி, காருக்குள் அமர்ந்து தனது குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்தார் ஒரு பெண்.

அப்போது திடீரென அங்கு வந்த ஒருவர், காரின் கதவைத் திறந்து அந்தப் பெண்ணைத் தாக்கியதுடன், குழந்தையையும் பறிக்க முயன்றுள்ளார். சத்தமிட்ட அந்தப் பெண் குழந்தையை இறுகப்பற்றிக்கொண்டபடி அவரை துரத்த முயன்றிருக்கிறார்.

நடப்பதைக் கவனித்த பொதுமக்கள் ஓடோடி வர, ஒருவர் அந்த நபரை மடக்கிப்பிடிக்க, அனைவருமாக, பொலிசார் வரும் வரை அவரைப் பிடித்துவைத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அந்த நபருடைய பெயர் Nathaniel Francis Beekmeyer (26) என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அவர் இம்மாதம், அதாவது, மே மாதம் 15ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

நடந்ததை அறிந்த மக்கள், அந்த பகுதியில் இதுவரை அப்படி நடந்ததில்லை என்கிறார்கள். எனக்கும் ஒரு அம்மாவும், மகளும், தங்கையும் இருக்கிறார்கள். அவர்களில் யாருக்காவது இப்படி நடக்குமென்றால் அதை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்கிறார் ஒருவர்.

எதனால் அந்த நபர் இப்படி நடந்துகொண்டார் என்பது தெரியவில்லை. சூழ்நிலை மாறிக்கொண்டே வருகிறது என்று கூறும் டேனியல் என்பவர், இங்குள்ள காபி ஷாப்களிலும் இதுபோல சில நுழைந்து போதையின் கட்டுப்பாட்டில் கலாட்டா செய்கிறார்கள். கேட்டால், போதைப்பொருட்கள் சட்டப்படியானதுதானே என்கிறார்கள் என்கிறார்.

related posts