Home இலங்கை உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க – அமைச்சரவை அனுமதி

உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க – அமைச்சரவை அனுமதி

by Jey

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகுவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைவாக அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

தற்போது கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவரும் மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டத்திற்கு மாகாண ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகளின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

related posts