Home இந்தியா சூரியனின் சக்திவாய்ந்த கதிர்கள் பூமியை தாக்கும்

சூரியனின் சக்திவாய்ந்த கதிர்கள் பூமியை தாக்கும்

by Jey

சூரியனின் ‘ஏஆர்13664’ பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த 11 ஆம் தேதி சூரியனின் ஏஆர் 3664 என்ற குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து வெளிப்பட்ட ‘எக்ஸ் ரக கதிர்கள்’ பூமியில் மிகப்பெரிய அளவில் தாக்கியது. இது குறித்து இஸ்ரோ செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

“கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சூரியனில் ஏற்பட்ட மிக வலிமையான புவிகாந்தப் புயலாக இது கருதப்படுகிறது.

1859-ஆம் ஆண்டு சூரியனில் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த சூரியப் புயலைத், தொடர்ந்து காந்தக் கதிர்வீச்சை குறுகிய நேரத்தில் அதிகளவில் வெளியிடும் சூரியனின் பகுதிகள் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெற்றது.

பல்வேறு எக்ஸ் ரக கதிர்கள் மற்றும் சூரியனின் வெளிப்புறத்தில் இருந்து அதிகளவில் வெளியிடப்படும் (சிஎம்இ) கதிர்களும் கடந்த சில நாட்களாக பூமியைத் தாக்கியது.

இதனால் துருவப் பகுதிகளில் பயணிக்கும் விமானங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபோன்ற சூரியனின் சக்திவாய்ந்த கதிர்கள் பூமியை தாக்கும் நிகழ்வுகள் வரும் நாட்களில் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

related posts