மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
2012 இல் நடைபெற்ற உள்ளாட்சிமன்றத் தேர்தலின்போது கொழும்பு, முல்லேரியா பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது.
பாரதலக்ஷ்மன் பிரேமசந்திர மற்றும் துமிந்த சில்வாவின் சகாக்களுக்கிடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இதில் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உட்பட மேலும் சிலர் கொல்லப்பட்டனர். துமிந்த சில்வா உள்ளிட்டவர்கள் காயமடைந்தனர்.
குறித்த கொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையிலேயே அவர் ஜனாதிபதி மன்னிப்பின்கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.