Home இந்தியா சுரங்கத்தில் 2,000 அடி ஆழத்தில் அறுந்து விழுந்த லிப்ட்

சுரங்கத்தில் 2,000 அடி ஆழத்தில் அறுந்து விழுந்த லிப்ட்

by Jey

ராஜாஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 14 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார்.

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கம் உள்ளது.

இந்த சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் அறுந்து விழுந்ததில் மூத்த விஜிலென்ஸ் அதிகாரிகள் உட்பட 15 பேர் சுரங்கத்தில் சிக்கினர்.

கொல்கத்தாவில் இருந்து வந்த விஜிலென்ஸ் குழுவை ஏற்றிச் சென்ற லிப்ட், சுரங்கத்திற்குள் கிட்டத்தட்ட 2,000 அடி ஆழத்தில் அறுந்த விழுந்ததாக கூறப்படுகிறது.

விஜிலென்ஸ் அதிகாரிகள் சுரங்கத்தின் அடிப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு திரும்பிய போது லிப்டின் கம்பி அறுந்து விழுந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

related posts