Home இலங்கை போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு இலங்கையர்களுக்கு உரிமை உண்டு.

போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு இலங்கையர்களுக்கு உரிமை உண்டு.

by Jey

இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் உரிமை உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் பாலஸ்தீனப் போர் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து திருகோணமலை (Trincomalee) சம்பூரில் நினைவேந்தல் கஞ்சி பரிமாறியதற்காக 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் தோழர்களுக்கு போரில் இறந்தவர்களை நினைவுகூர, அவர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நக்பா சம்பவத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் நாளை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது.

இதேபோன்று உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையர்களுக்கும் உரிமை உண்டு.

போரில் இறந்தவர்களை நினைவு கூரும் உரிமையானது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமை எனவும், இலங்கையிலும் அந்த உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

related posts