நாய்க் கடிக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அண்மையில் 4 வயது சிறுமியொருவர் நாய் கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், தற்சமயம் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், உப்பு பாளையம் வீதியைச் சுர்ந்த முனுசாமி என்ற 45 வயதான நபர் நாய் கடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கட்டிட தொழிலாளியான முனுசாமியை கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்துள்ளது. அதற்கு சரியாக சிகிச்சை பெறாமல் இருந்துள்ளார் முனுசாமி.
இவ்வாறிருக்க திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட முனுசாமி, மருத்துவரை அணுகும்போது, நாய் ஏதேனும் கடித்ததா? என்று கேட்டுள்ளனர். அதற்கு நடந்த விடயத்தைக் கூறியுள்ளார் முனுசாமி.
இந்நிலையில் உடனடியாக முனுசாமியை திருச்சி நாய் கடி சிறப்பு பிரிவுக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவர்கள்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த முனுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.