சர்வதேச நீதிமன்றின் தீர்ப்பினை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய தென்காசா பிராந்தியத்தின் ரபாவில், இஸ்ரேல் படையினர் முன்னெடுத்து வரும் தாக்குதல்களை உடன் நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் போராளிகள் பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் காசாவில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் அவர் இவ்வாறு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்றின் உத்தரவின் பிரகாரம் சர்வதேச சட்டங்களுக்கு அமைய அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் கனடிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.