பழங்குடியின விவகார மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தலைமையிலான லிபரல் அரசாங்கத்தின் பழங்குடியின விவகார மத்திய அமைச்சராக கரோலின் பெனாட் பதவி வகித்து வருகின்றார்.
பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் ஜோடி வில்சன் ரொய்போல்ட் தொடர்பில் அமைச்சர் கரோலின் வெளியிட்ட கருத்து தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஓய்வூதியம் பெற்றுக் கொள்வதற்காக ரொய்போல்ட் பழங்குடியின மக்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாக கரோலின் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதனைத் தொடர்ந்து அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார்.
எனினும், கரோலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.