சஸ்கட்ச்வானின் மாரிவெல் வதிவிடப்பாடசாலையில் 751 புதை குழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பழங்குடியின ஒன்றியம் தகவல் வெளியிட்டுள்ளது.
அடையாளப்படுத்தப்படாத இந்த புதைகுழிகள் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
காம்லூப்ஸ் பாடசாலையில் அண்மையில் 215 சிறார்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில், மாரிவெல் இந்திய வதிவிடப் பாடசாலை புதை குழி விவகாரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதைகுழிகளில் சிறுவர்கள் புதைக்கப்பட்டுள்ளார்களா இல்லையா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த வதிவிடப் பாடசாலையை றோமன் கத்தோலிக்க தேவாலயம் நடாத்தி வந்தது என்பதுடன் குறித்த பகுதியில் பெரியவர்களின் சடலங்களும் புதைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதைகுழிகளில் கல்லறைச் சின்னங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த புதைகுழிகளை அடையாளப்படுத்தப்படாத புதைகுழிகளாக அறிவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புதைகுழிகள் தொடர்பில் தொழில்நுட்ப உதவியுடன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறெனினும் இந்த புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டமை பழங்குடியின சமூகத்தினர் மத்தியில் பாரியளவு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேவாலயங்களினால் பராமரிக்கப்பட்டு வந்த வதிவிடப் பாடசாலைகளில் பழங்குடியின சிறார்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இனச் சுத்திகரிப்பு
இடம்பெற்றுள்ளதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.