வவுனியாவில் மக்களுக்காக காடுகளை விடுவிப்பு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த போதிலும் அவரின் உத்தரவை சில அரச அதிகாரிகள் உதாசீனப்படுத்துவதாக வவுனியா அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அபிவிருத்தி குழு அலுவலகத்தில் நேற்றையதினம் (03.06.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து தொடர்ச்சியாக கொடுத்த அழுத்தத்திற்கு அமைவாக வவுனியா மாவட்டத்தில் வனவள திணைக்களத்திடம் இருந்து பல்லாயிரக்கணக்கான காணிகளை விடுவிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆனால், ஜனாதிபதியின் வேலைத் திட்டத்தினை மதிக்காமல் செயற்படும் சில அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்களின் மீது மறைமுக அழுத்தத்தினை பிரயோகிப்பது வேதனையான விடயமாகும் என திலீபன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.