அவசர நிலையை எதிர்த்து, இந்திய ஜனநாயகத்தை பாதுகாத்தவர்களை நினைவு கூர்வோம் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்
கடந்த 1975ம் ஆண்டு, ஜூன் 25ம் தேதி , இந்தியாவில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. 21 மாதங்கள் அமலில் இருந்த அவசர நிலை 1977 ம் ஆண்டு, மார்ச் 21ல் நீக்கப்பட்டது.
அவசர நிலை அமல்படுத்தப்பட்ட நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:
அவசர நிலை அமல்படுத்தப்பட்ட கறுப்பு நாட்களை ஒரு போதும் மறக்க முடியாது. 1975 முதல் 1977 ம் ஆண்டு வரை, இந்திய அரசியல் சாசனப்படி அமைக்கப்பட்ட அமைப்புகள் அழிவை சந்தித்தன. நாட்டின் ஜனநாயக உணர்வுகளை வலுப்படுத்த சாத்தியமான அனைத்தையும் செய்வோம் எனவும், நமது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதிப்புகளுக்கு ஏற்ப வாழ்வோம் எனவும் நாம் உறுதி ஏற்போம்.
அவசர நிலையை எதிர்த்து, ஜனநாயகத்தை பாதுகாத்த அனைத்து சிறந்த தலைவர்களை நினைவு கூர்வோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.