Home விளையாட்டு யாழில் “இந்து சகோதரர்களின் சமர் ” எனும் தொனிப்பொருளில் – துடுப்பாட்ட சுற்றுப்போட்டி

யாழில் “இந்து சகோதரர்களின் சமர் ” எனும் தொனிப்பொருளில் – துடுப்பாட்ட சுற்றுப்போட்டி

by Jey

யாழில் “இந்து சகோதரர்களின் சமர் ” எனும் தொனிப்பொருளில் மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட சுற்றுப்போட்டி ஒன்று ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டியானது நாளை மற்றும் நாளை மறுதினம் மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் நகரிலிருந்து பட்டினங்கள் நோக்கி நகரும் கிரிக்கெட் பாரம்பரியம் என இரு கல்லூரியின் அதிபர்களும் தெரிவித்ததுடன், வியாஸ்காந் போல சர்வதேச வீரர்களை நகரத்திற்கு வெளியே இருந்து எடுத்து செல்ல இது அடித்தளமாக அமையும் எனவும் இரு அணித்தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

துடுப்பாட்ட சமர் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபர் சர்வேஸ்வரன் “மானிப்பாய் இந்து கல்லூரி மற்றும் எமது சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியன பெரும் சமர் ஒன்றினை ஆரம்பிக்கின்றோம்.

எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இந்த பெரும் சமர் இடம்பெறும். இந்து சகோதரர்களுக்கிடையிலான சமர் என்ற பெயருடன் இடம்பெறும்.

இரு கல்லூரிகளுக்கிடையிலான துடுப்பாட்ட மோதல் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு முதல் தடவையாக இடம்பெறுகின்றது.

இவ்வருடம் மானிப்பாய் இந்துவிலும் வருகின்ற வருடம் சாவகச்சேரி இந்துவிலும் ஆரம்பமாகும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த துடுப்பாட்டச் சமரினை வெற்றிகரமாக இவ்வருடத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளோம். இந்து சகோதரர்களின் சமர் என்று வர்ணிக்கப்படுகின்ற இந்தப் போட்டி இரண்டு நண்பர்களையும் இணைத்து நிற்கின்றது.

 

related posts