கனடாவில் தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பொருளாதாரத்தில் புதிய தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் கூடுதல் எண்ணிக்கையில் தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதுடன் ஊதியங்களும் அதிகரித்துள்ளன.
இதேவேளை, வேலையற்றோர் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மந்த கதியில் இயங்குவதனையே இந்த பொருளாதார குறிகாட்டிகள் மூலம் அறிந்து கொள்ள முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருவதாக பொருளாதார நிபுணர் ஆர்மின் யால்நிசியான் (Armine Yalnizyan) தெரிவித்துள்ளார்.
கடந்த 28 மாதங்களில் பதிவான அதிகூடிய வேலையற்றோர் எண்ணிக்கை கடந்த மே மாதம் பதிவாகியுள்ளது.