Home கனடா கனடாவில் வாழும் இந்திய புலம்பெயர்ந்தோரை விமர்சித்த இளம்பெண்

கனடாவில் வாழும் இந்திய புலம்பெயர்ந்தோரை விமர்சித்த இளம்பெண்

by Jey

கனடாவில் வாழும் இந்திய புலம்பெயர்ந்தோரை விமர்சித்து இளம்பெண் ஒருவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்று வைரலாகிவருகிறது.

மேகா என்னும் பெயரில் சமூக ஊடகமான எக்ஸில் இடுகை ஒன்றை வெளியிட்டுள்ள பெண்ணொருவர், தானும் தன் குடும்பத்தினரும் கனடாவில் வாழும் இந்திய புலம்பெயர்ந்தோரை வெறுப்பதாக தெரிவித்துள்ளார்.

அதற்கான காரணங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேகா வெளியிட்டுள்ள செய்தியில், நானும் என் குடும்பத்தினரும் இந்திய புலம்பெயர்ந்தோர் கனடாவை நிரப்புவதை வெறுக்கிறோம்.

அவர்கள் நமது நற்பெயரையே கெடுத்துவிட்டார்கள். கல்வி கற்ற இந்திய புலம்பெயர்ந்தோர் நல்ல குடும்பங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் வருகிறார்கள். அவர்கள் நாகரீகமானவர்களாகவும், ஆங்கிலத்திறமையும் ஆசாரங்களை கடைப்பிடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆனால், இந்த புதிய புலம்பெயர்ந்தோர், கடற்கரைகளை அசுத்தம் செய்வதும், பெண்களிடம் மோசமாக நடந்துகொள்வதுமாக இருக்கிறார்கள். அவர்கள், படிக்காத, தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த பின்னணி கொண்டவர்கள். சமுதாயக் கடமையோ, கற்கும் திறனோ இல்லாதவர்கள்.

வகுப்புப் பிரிவினைகள் உண்மைதான் என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துள்ள மேகா, 1980, 90களில் கனடாவுக்கு வந்த இந்திய புலம்பெயர்ந்தோரை மட்டும் புகழ்ந்து எழுதியுள்ளார்.

மேகாவின் கருத்துக்கு பல தரப்பிலிருந்தும், பல வகையான பதில் கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள் இணையவாசிகள். அவரது இடுகை நான்கு லட்சத்தும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

related posts