Home உலகம் மாறுபட்ட டெல்ட்டா திரிபு குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு

மாறுபட்ட டெல்ட்டா திரிபு குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு

by Jey

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸின் புதிய மாறுப்பட்ட டெல்ட்டா திரிபு காரணமாக கூடுதல் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பங்களாதேஸ், இந்தேனேஷியா, அவுஸ்திரேலியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் டெல்ட்டா திரிபு காரணமாக கூடுதல் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் ரஷ்யாவிலும் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சென்பீட்டஸ் பேர்க் தரப்பினர் அறிவித்துள்ளனர். செல்வந்த நாடுகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டாலும், புதிய மாறுப்பட்ட டெல்ட்டா திரிபு காரணமாக கூடுதல் பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் கொவிட் 19 வைரஸினால் 3 கோடியே 93 இலட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமான மரணங்கள் சம்பவித்துள்ளன.

இந்நிலையில் உடனடியாக டெல்ட்டா திரிபு குறித்து கவனம் செலுத்த வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் எட்னம் அறிவித்துள்ளார். உலகில் ஆகக்குறைந்தது 85 நாடுகளில் தடுப்பூசி ஏற்றப்பட்ட தரப்பினருக்கு மத்தியிலும் டெல்ட்டா திரிபு பரவிவருவதாக கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் எட்னம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பங்களாதேஷில் நாடு தழுவிய ரீதியில் நாளைய தினம் முதல் ஒரு வார காலத்திற்கு முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2வார காலம் முடக்கநிலை அறிவிக்கப்பட்டு மக்களை வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தோனேஷியாவின் 270 மில்லியன் மக்கள் மிகவும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் நேற்றைய தினத்தில் மாத்திரம் 21 ஆயிரம் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ அறிவித்துள்ளார்.

related posts