கொவிட் சட்டங்களை மீறியதாக 30 வீதமான கனேடியர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கொவிட்19 நோய்த் தொற்று பரவுகை தொடர்பிலான கெடுபிடிகளை மீறியவர்கள் தொடர்பில் இந்தக் கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் சுமார் 30 வீதமானவர்கள் தாங்கள் கொவிட் சட்டங்களை மீறியதாகவும் அது நியாயமானதே எனவும் தெரிவித்துள்ளனர்.
முகக் கவசம் அணிதல் மற்றும் ஒன்றுகூடுதல் ஆகிய விடயங்களில் இவ்வாறு அதிகளவில் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.