இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
இஸ்ரேலிலிருந்து 251 பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பு காஸாவுக்கு கடத்திச் சென்றது.
இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 100க்கும் அதிகமான பணயக் கைதிகளை மீட்டது.
இந்தப் போரில் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறிருக்க, கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதியன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக் குழுவில் ஐ.நா ஊழியர்களும் கலந்துகொண்டதாக தகவல் வெளியானது.
காசாவில் செயல்பட்டு வரும் ஐ.நாவுக்கான பலஸ்தீன அகதிகள் அமைப்பிலுள்ள ஊழியர்கள் ஹமாஸ் ஆயுதக் குழுவுடன் இணைந்து செயற்பட்டதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஐ.நா நடத்திய விசாரணையில், ஒக்டோபர் 7ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அமைப்பைச் சேர்ந்த 9 பேர் இடம்பெற்றுள்ளமை உறுதியானது.
அந்த 9 பலஸ்தீன ஊழியர்களையும் ஐ.நா பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.