Home உலகம் பங்களாதேஷுக்குத் திரும்பும் திட்டத்தை ஹசீனா விரும்பவில்லை

பங்களாதேஷுக்குத் திரும்பும் திட்டத்தை ஹசீனா விரும்பவில்லை

by Jey

பங்காளதேஷை 15 ஆண்டுகள் வழிநடத்திய பிறகு, ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் ஷேக் ஹசீனா, திங்களன்று மக்கள் போராட்டம் உச்சத்தை எட்டியதால், இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடந்த மூன்று வாரங்களாக வன்முறைகளாலும், மரணத்தாலும் தத்தளித்த டாக்காவின் தெருக்களில் அவர் வெளியேறியதைத் தொடர்ந்து கொண்டாட்டங்கள் வெடித்தன.

முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக் தவிர, அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்து புதிய இடைக்கால அரசாங்கம் விரைவில் அமைக்கப்படும் என்று அந்நாட்டு இராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் கூறினார்.

அதேநேநேரம், 300 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அவர் உறுதியளித்தார்.

இது “வன்முறையை நிறுத்துவதற்கான நேரம்” என்றும் “அனைத்து அநீதிகளும் தீர்க்கப்படும்” என்றும் கூறினார்.

இராணுவ விமானத்தில் இந்தியா வந்த ஹசீனா, இங்கிலாந்தில் தஞ்சம் கோர இருப்பதாக கூறப்படுகிறது.

ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் ஜாய், பங்களாதேஷுக்குத் திரும்பும் திட்டத்தை ஹசீனா விரும்பவில்லை என்று உறுதிப்படுத்தினார்.

 

 

related posts