ஜம்மு – காஷ்மீரில் முதியவருக்கு திருமணம் செய்து வைக்க சீக்கிய பெண்கள் இருவரைக் கடத்தி, கட்டாய மத மாற்றம் செய்ததைக் கண்டித்து, சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
வயதான நபர்களுக்குத் திருமணம் செய்து வைக்க, ஜம்மு – காஷ்மீரில் சீக்கிய பெண்கள் இருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மன்ஜிந்தர் எஸ் சிர்சா தலைமையில் சீக்கியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, மன்ஜிந்தர் எஸ் சிர்சா செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்து உள்ளதாவது: 62 வயதுடைய முதியவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக, இரு சீக்கிய சிறுமிகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக சட்டங்கள் வலுவாக்கப்பட்டு உள்ளதைப் போல், யூனியன் பிரதேசங்களிலும் சட்டங்களை வலுவாக்க வேண்டும். இதை வலியுறுத்தி, தலைநகர் ஜம்மு – காஷ்மீரில் கண்டனப் பேரணியில் ஈடுபட திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.