Home கனடா மின்சார அடுப்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்த சாம்சங் நிறுவனம்

மின்சார அடுப்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்த சாம்சங் நிறுவனம்

by Jey

கனடாவில், சாம்சங் நிறுவனம் தனது தயாரிப்பான மின்சார அடுப்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான, electric range என அழைக்கப்படும் மின்சார அடுப்பு மற்றும் ஓவன் இணைந்த சாம்சங் நிறுவனத் தயாரிப்புகளை அந்நிறுவனம் திரும்பப் பெறுகிறது.

பக்கவாட்டில் அடுப்பைப் பற்றவைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள knobகள் மீது மனிதர்களோ செல்லப்பிராணிகளோ தெரியாமல் மோதினால் கூட, தீவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கனடா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கனடா முழுவதும், இதுவரை, சாம்சங் நிறுவனத்தில் இந்த அடுப்பால் சுமார் 57 அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் கனடா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் 250 தீவிபத்துக்கள் ஏற்பட்டு, பலர் காயமடைந்ததாக தகவல்கள் கிடைத்ததையடுத்து ஆகத்து மாதத்தில் சுமார் 1.12 மில்லியன் மின்சார அடுப்புகளை சாம்சங் நிறுவனம் திரும்பப் பெற்றது.

அந்த விபத்துக்களில், 18 விபத்துக்களால் வீடுகளுக்கு பலத்த சேதமும் ஏழு செல்லப்பிராணிகளுக்கு மரணமும் நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

related posts