Home கனடா கனடாவில் டிக்டொக் காணொளி ஒன்றை பகிர்ந்த நபருக்கு ஆறு ஆண்டுகள் சிறை

கனடாவில் டிக்டொக் காணொளி ஒன்றை பகிர்ந்த நபருக்கு ஆறு ஆண்டுகள் சிறை

by Jey

கனடாவில் டிக்டொக் காணொளி ஒன்றை பகிர்ந்த நபர் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத சம்பவங்கள் தொடர்பிலான டிக்டொக் காணொளியை குறித்த நபர் பகிர்ந்துள்ளார்.

கல்கரியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது குறித்த காணொளியொன்றே இவ்வாறு பகிரப்பட்டுள்ளது.

ஸகாரியா ரைடா ஹுசெய்ன் என்ற நபரே இவ்வாறு நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

ஸகாரியாவிற்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த நான்கு தீவிரவாத குற்றச்சாட்டுக்களில் ஒரு குற்றச்சாட்டினை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு மற்றும் குண்டு தயாரித்தல் உள்ளிட்ட காணொளிகளை சமூக ஊடகங்களின் வழியாக தாம் பகிர்ந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

related posts