கனடாவில் கொவிட்19 மரணங்கள் எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வ தகவல்களை விடவும் இரண்டு மடங்கு அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கொவிட் பெருந்தொற்று பதிவாகியது முதல் இதுவரையில் கனடாவில் 26230 மரணங்கள் என அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எனினும் இந்த அதிகாரபூர்வ மரண எண்ணிக்கையை விடவும் இரட்டிப்பான அளவு கொவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தொற்று நோய் ஆய்வாளர் றொரன்டோ பல்கலைக்கழக பேராசிரியர் டாரா மொரியார்டி தெரிவித்துள்ளார்.
கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு வெளியேயும் மரணங்கள் பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வருமானம் குறைந்த, இனரீதியான சமூகங்கள் அதிகளவில் இவ்வாறு கொவிட் காரணமாக மரணித்துள்ளதாகவும் இவை பதிவு செய்யப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீண்ட கால பராமரிப்பு நிலையங்களில் பதிவான மரணங்களைப் போன்றே அதற்கு வெளியேயும் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், வயது மூத்தவர்கள் போன்றே 45 வயதுக்கும் மேற்பட்டவர்களின் மரணங்களும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.