வட கொரியா (North Korea) மர்மங்களால் நிறைந்த நாடு. அங்கே என்ன நடக்கிறது என்பதை வெளியுலகம் தெரிந்து கொளவது மிகவும் கடினம். அதுவும் அதன் அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) பற்றிய தகவல்கள் அவ்வளவு எளிதில் வெளியே வராது. வடகொரொய ஊடகங்கள், அதிபர் என்ன நினைக்கிறாரோ தைத் தான் பேச வேண்டும்,. மக்களும் அதிபர் எண்ணப்படியே நடக்க வேண்டும்.
கிம் ஜாங் உன் உடல் நிலை குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிவதுண்டு. சென்ற ஆண்டு அவர் இறந்து விட்டார் என்று கூட செய்திகள் வந்தன. ஆனால், பின்னர் அவர் பொதுவில் தோன்றி அந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்
கிம் ஜாங் உன் (Kim Jong Un) என்ற பெயரை கேட்டவுடன் நமது கண் முன் தோன்றுவது, அவரது உருண்டயான முகமும் குண்டான தோற்றமும் தான். மக்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் அவரது தோற்றமே அவர் ஒரு சர்வாதிகாரி என்பதை உறுதிப் படுத்தும். அப்படிப்பட்ட கம்பீரமான தோற்றம் கொண்டவர் உடல் மெலிந்து, காணப்பட்டால் அனைவருக்கும் அதிர்ச்சியாகத் தானே இருக்கும். பல நாட்களுக்கு பின் அவர் பொதுவில் தோன்றிய நிலையில், அவரை பல கால யாரும் பார்க்காத நிலையில், அவரது இந்த மெலிந்த தோற்றம் மக்கள் அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது, வட கொரியாவில் தற்போது இது தான் பேசு பொருளாக உள்ளது.
சமீபத்தில் வெளிவந்த ஒரு புகைப்படத்தைப் பார்க்கும்போது, கிம் ஏதோ ஒரு தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர் போல் தோன்றுகிறது.அவரது தோற்றத்தை பார்க்கும் போது, அவர் 10 முதல் 20 கிலோ எடையை இழந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.