அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
எனினும், அங்குள்ள ஏனைய ஊடகங்கள் இதனை உறுதிப்படுத்தவில்லை.
தற்போதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி பெரும்பாலான இடங்களில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், புளோரிடாவின் வெஸ்ட் பால்ம் கடற்கரையில், மாநாட்டு மையத்தில் ட்ரம்ப் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எடிசன் ஆராய்ச்சியின் படி, ட்ரம்ப் ஏற்கனவே வட கரோலினா மற்றும் ஜோர்ஜியாவின் ஸ்விங் மாநிலங்களை வென்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், நாட்டின் பரந்த பகுதிகளில் பலத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புற மையங்கள் வரை எல்லா இடங்களிலும் ட்ரம்ப தனது செயல்திறனை மேம்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.