கனடாவில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டிருக்காவிட்டால் கொவிட் மூன்றாம் அலையில் அதிகளவான மரணங்கள் பதிவாகியிருக்கும் என கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டெம் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டதனால் பெரும் எண்ணிக்கையிலான வயது முதிர்ந்தவர்களை பாதுகாத்துக்கொள்ள முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வயோதிப நோய்த் தொற்றாளர்கள் பதிவாகின்ற போதிலும் தடுப்பூசி ஏற்றலின் காரணமாக நோய் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் அலை தாக்கிய போது 80 வயதுக்கும் மேற்பட்ட நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மூன்றாம் அலையின் போது நோய்த் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவானமைக்கு தடுப்பூசி ஏற்றுகையே பிரதான ஏதுவென திரேசா டேம் தெரிவித்துள்ளார்.