கடுமையான வெப்பநிலை காரணமாக கனடாவில் பல மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுற்றாடல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரையில் வான்கூவரில் வெப்பம் காரணமாக 65 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வான்கூவார் பெருநகர பகுதியின் முக்கிய நகரங்களில் வெப்பம் காரணமாக இவ்வாறு மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் மட்டும் வெப்பம் காரணமாக 20 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வான்கூவரில் பதிவான திடீர் மரணங்களில் அநேகமானவை வெப்பத்துடனான காலநிலையினால் ஏற்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வயது முதிர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.
அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் மாகாண மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொல்பியாவில் வரலாறு காணாத அளவில் அதிகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.