Home கனடா கனடிய பிரதமர் லிபரல் கட்சி தலைமைப் பதவியிலிருந்து விலகினார்

கனடிய பிரதமர் லிபரல் கட்சி தலைமைப் பதவியிலிருந்து விலகினார்

by Jey

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொண்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் இன்றைய தினம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கட்சியின் புதிய தலைவர் தெரிவு மேற்கொள்ளப்படும் வரையில் பிரதமர் பதவியில் தாம் நீடிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு அழுத்தங்கள் விமர்சனங்களைத் தொடர்ந்து ட்ரூடோ இவ்வாறு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 24ம் திகதி வரையில் நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் தேர்தல் நடைபெற்றால் கொன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டும் என தெரிய வருகின்றது.

related posts

Leave a Comment