கனேடிய தினத்தில் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே பணிப்புரை விடுத்துள்ளார்.
கனடாவில் இன்றைய தினம் கனேடிய தினமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வதிவிடப் பாடசாலைகளில் கொல்லப்பட்ட பழங்குடியின சிறார்களை கௌரவிக்கும் நோக்கில் இன்றைய தினம், கனடாவின் பீஸ் கோபுரத்தில் அமைந்துள்ள பிரதான கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
வதிவிடப் பாடசாலைகளில் இடம்பெற்ற பாரிய துயரச் சம்பவம் தொடர்பில் மக்கள் கவலை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய வாரங்களில் பழங்குடியின சிறார்கள் வதிவிடப் பாடசாலைகளில் துன்புறுத்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல்வேறு நகரங்களிலும், சமூகங்களிலும் கனேடிய தின நிகழ்வுகளை விமரிசையாக கொண்டாடுவதற்கான முனைப்புக்கள் காண்பிக்கப்படவில்லை.