Home உலகம் பிரிட்டனுக்கும், அமெரிக்காவிற்கும் ரஸ்யா எச்சரிக்கை

பிரிட்டனுக்கும், அமெரிக்காவிற்கும் ரஸ்யா எச்சரிக்கை

by Jey

தங்களது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பிரிட்டன் போர்க் கப்பலுக்கு, அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் உதவி செய்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமீயாவை ரஷ்யா கடந்த 2014ம் ஆண்டு தங்களது எல்லையுடன் இணைத்துக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்காவும், பிரிட்டனும் ரஷ்யா மீது, பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இந்தச் சூழலில், கிரிமீயா அருகே கருங்கடல் பகுதியில் பிரிட்டன் கடற்படைக்குச் சொந்தமான டிபண்டர் கப்பல் கடந்த 23ம் தேதி அத்துமீறி நுழைந்ததாக ரஷியா குற்றம் சாட்டியது.

அதையடுத்து, பிரிட்டன் கப்பலை எச்சரிக்கும் வகையில் தங்களது போர்க் கப்பல்கள் சுட்டதாகவும், பிரிட்டன் கப்பல் சென்ற பாதையின் குறுக்கே போர் விமானம் மூலம் குண்டுவீச்சு நடத்தியதாகவும் ரஷியா கூறியது. ஆனால் இதை பிரிட்டன் மறுத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 30) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்து உள்ளதாவது:கடந்த வாரம் கிரீமியா கடல் எல்லைக்குள் பிரிட்டன் கப்பல் அத்துமீறி நுழைந்தபோது, அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் அந்தக் கப்பலுடன் தொடர்பில் இருந்து உதவிகள் செய்துள்ளது. அந்தச் சம்பவத்தின்போது ரஷ்யாவின் எதிர்வினைகள் குறித்து அறிந்துகொண்டு, அதனை பிரிட்டன் கப்பலிடம் தெரிவிக்கும் செயலில் அமெரிக்க விமானம் ஈடுபட்டது என தெரிவித்துள்ளார்.

 

 

related posts