கனடா தின நிகழ்வுகளை ரத்து செய்யுமாறு கோரி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஒரேஞ் நிற சேர்டுகள் அணிந்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கனடாவின் றோமன் கத்தோலிக்க தேவாலயங்களினால் பராமரிக்கப்பட்டு வந்த மூன்று வதிவிடப் பாடசாலைகளில் சிறார்களின் சடலங்களும் அடையாளம் காணப்படாத புதைகுழிகளும் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.
இந்த புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் கனடா தினத்தை கொண்டாட வேண்டாம் எனக் கோரி போராட்டம் நடத்தியிருந்தனர்.
கனடாவில் கொல்லப்பட்ட அனைத்து உயிர்களும் மதிக்கப்பட வேண்டுமென போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கனடா வெட்கப்பட வேண்டுமென கோஷம் எழுப்பியிருந்தனர்.