Home உலகம் ட்விட்டருக்கு பதிலாக ட்ரம்ப் தரப்பு அறிமுகம் செய்யும் GETTR

ட்விட்டருக்கு பதிலாக ட்ரம்ப் தரப்பு அறிமுகம் செய்யும் GETTR

by Jey

ட்ரம்பின் சமூக ஊடகங்களின் மீதான ஆர்வத்தை கருத்தில் கொண்டு, அவரது குழு ஒரு புதிய சமூக ஊடக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ட்ரம்பின் முன்னாள் மூத்த ஆலோசகர் ஜேசன் மில்லர், பேச்சு சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்கு, ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளமான GETTR என்னும் புதிய சமூக ஊடக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இருப்பினும், முன்னாள் அதிபர் டிரம்ப் இந்த தளத்தில் இன்னும் தனது கணக்கை தொடக்கவில்லை.

GETTR செயலியை கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலியை ப்ரவுஸர் மூலமாகவும் அணுகலாம். ஆப் ஸ்டோரில் இந்த செயலி ‘M’ என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 17 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் கணக்கை தொடக்கலாம். இந்த செயலி ட்விட்டருக்கு (Twitter) மிகவும் ஒத்ததாக இருக்கிறது. இது மைக்ரோ பிளாக்கிங் தளத்தின் பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

GETTER ஐ அறிமுகப்படுத்திய மில்லர், முன்னாள் அதிபர் டிரம்ப் தற்போது எங்கள் சமூக வலைதளத்தில் இல்லை என்றாலும், அவருடைய GETTR கணக்கை ‘realDonaldTrump’ என்னும் பெயரில் தொடக்கியுள்ளேன். எங்கள் சமூக ஊடக தளத்தில், கணக்கை தொடக்குமாறு, நாங்கள் அவரிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இந்த செயலி Android மற்றும் iOS ஆப் ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் முதல் 10 தரவரிசையில் காணப்பட்டது. இந்த செயலி இப்போது அதன் போட்டி தளமான ட்விட்டரை போல பிரபலமாக இல்லை. இதற்கிடையில், GETTR இன் உள்ளடக்கம் இனவெறி, பாலியல் வன்முறை மற்றும் ஓரினச்சேர்க்கை போன்ற பல விஷயங்களை ஊக்குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

related posts