கனடாவின் ஆளுனர் நாயகம் பதவிக்கு பழங்குடியின பெண்ணின் பெயரை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே பரிந்துரை செய்துள்ளார்.
பழங்குடியினத்தைச் சேர்ந்தவரும் ராஜதந்திரியுமான மேரி சிமோனின் பெயர் இவ்வர்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆளுனர் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்ட முதல் பழங்குடியின பெண் மேரி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
மேரி சிமோன் வடக்கு கியூபெக்கின் நுனாவிக்கில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் முதல் ஆளுனர் நாயகமாக பதவியை ஏற்றுக் கொள்வது பெருமிதம் மிக்கது எனவும் இதனை கௌரவமாக கருதுவதாகவும் அவர் மேரி சிமோன் தெரிவித்துள்ளார்.