ஒன்றாரியோ மாகாணத்தில் 50 வீதமான வயது வந்தவர்களுக்கு இரண்டு மாத்திரை தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் ஐந்து மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் மாகாணத்திற்கு கிடைக்கப் பெற உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
18 வயதுக்கும் மேற்பட்ட 51 வீதமானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை ஏற்றுவதன் மூலமே இயல்பு நிலைமையை கொண்டு வர முடியும் என மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியோட் தெரிவித்துள்ளார்.