முன்னாள் அமைச்சரும், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினருமான ஜூடி வில்சன் ராய்போல்ட் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
பழங்குடியினத்தைச் சேர்ந்த ராய்போல்ட் லிபரல் அராசங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதில் பயனில்லை என ராய்போல்ட் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாடாளுமன்றம் விசம் நிறைந்ததாகவும் செயற்திறனற்றதாகவும் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் முதல் பழங்குடியின நீதி அமைச்சராக ராய்போல்ட் கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டிருந்தார்.