ஹ_வாவே நிறுவனத்திந் பிரதம நிதி நிறைவேற்று அதிகாரி மெங் வான்சூவு குறித்த வழக்கின் புதிய சாட்சியங்களை ஏற்றுக் கொள்வதனை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வான்சூவுவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவது குறித்த வழக்கின் புதிய சாட்சியங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என பிரதம நீதியரசர் ஹீதர் ஹொல்ம்ஸ் நிராகரித்துள்ளார்.
என்ன காரணத்திற்காக இந்த சாட்சியங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறித்து பத்து நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா போலியான தகவல்களை வழங்கி நீதிமன்றை பிழையாக வழிநடத்தியுள்ளது என மெங் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக மெங் தொடர்ந்தும் கூறி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.