வார இறுதி நாட்களில் கனடா அமெரிக்க எல்லைப் பகுதியில் அதிக பயணிகள் பயணிக்கக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட்19 நோய்த் தொற்று நிலைமை காரணமாக எல்லைப் பகுதிகள் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயணத்தடை தளர்த்தப்பட்டதன் பின்னரான முதல் வார இறுதி என்பதனால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயணம் செய்யக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதுடன் பயணிகளின் எண்ணிக்கை 25 வீதத்தினால் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தடுப்பூசியை முழுமையாக ஏற்றிக் கொள்ளாத பலர் எல்லைப் பகுதிகளில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.