கொவிட் சுகாதார கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி திருமணம், பொது நிகழ்வுகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் 150 பேர் மாத்திரம் கலந்து கொள்ளும் அளவு திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாம் என்றும் ஆனால் அது பெரிய மண்டபத்தில் நடத்தப்பட வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் கருத்தரங்குகள், விளம்பர நிகழ்வுகள், கூட்டங்கள், செயலமர்வுகள் சுமார் 50 பேரை கொண்டு செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்து மேலும் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள வழிகாட்டல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.