உலக நாடுகள் ஈரானை புறக்கணிக்க வேண்டுமென கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டிவன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய புதிய ஜனாதிபதி Ebrahim Raisi இன் நடவடிக்கைகள் மனித உரிமை விவகாரங்களுக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ப்ரீ ஈரான் என்ற உலக நிகழ்நிலை மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய புதிய ஜனாதிபதியுடன் உலகின் எந்தவொரு நாடும் இணைந்து செயற்பட்டால் அது அந்த நாட்டுக்கே வெட்கக்கேடு என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி Ebrahim Raisi ஓர் குற்றவாளி எனவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருபவர் எனவும் அவரிடம் மனிதத்தை எதிர்பார்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.