கனடாவில் இரு வேறு இடங்களில் பதிவான ரயில் மோதுண்ட சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர்.
மில்டன் பிரதேசத்தில் பெண் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹால்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ப்ரோனோட் வீதியில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பிரம்டனில் சரக்கு ரயில் ஒன்றில் மோதுண்டு இரண்டு பாதசாரிகள் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை மில் வீதியின் தேவாலயமொன்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.