அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் நெவாடா மாநிலங்களில் கடும் வெப்பநிலை நிலவுகிறது. அதேபோன்று ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கடும் வெப்பம் நிலவுவதாக அறிவிக்கப்படுகின்றது.
வட அமெரிக்காவை அண்டிய பல பகுதிகளில் கடும் வெப்பமான சூழல் நிலவுவதை தொடர்ந்து கலிபோர்னியா மற்றும் நெவாடா மாநிலங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. கலிபோர்னியா மாநிலத்தின் சில இடங்களில் வெப்பநிலை 54.4 சென்றி கிரேட்டாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மக்களுக்கு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
இதேநேரம் ஸ்பெயினின் தலைநகர் மெட்ரிடின் வெப்பநிலை 43 பாகை செல்சியஸாக உயர்ந்துள்ளது. தற்போதைய வெப்பதுடனான காலநிலை தொடர்ந்தால், 50 பாகை செலிசியஸ் வரை அது உயரலாம் என அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேபோன்று ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிலும் வழமையான வெப்பநிலையை விட 10 பாகை செல்சியஸ் அதிகரித்த வெப்பநிலை நிலவுகிறது. தற்போது மொஸ்கோ நகரின் வெப்பநிலை 33 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளது.